இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

மனிதர்களின் செயற்பாடுகள்
மனிதர்களின் செயற்பாடுகள், மற்ற சாதனங்களை விட வளிமண்டலத்தில் பசுமை கூடக வாயுக்களின் தன்மைக்கு முக்கிய தாக்கமாக அமைகிறது. ன் 2007 மதிப்பீட்டு அறிக்கையானது 20ம் நூற்றாண்டில் பின் பகுதியில் உலகளவிலாக காணப்பட்ட சராசரி வெப்பத்தின் அளவு உயர்வதற்கு காரணம் மனிதனால் உருவாக்கப்பட்ட கிரீன் ஹவுஸ் வாயுக்களின் செறிவூட்டமாக இருக்கலாம். என அறிவித்துள்ளது.

பசுமை கூடக வாயுக்களின் முக்கிய காரணிகளான மனிதர்களின் செயற்பாடுகள் பின் வருமாறு:

  • பொருளை எரிப்பதால் ஏற்படும் வாயு மற்றும் காடுகளை அழிப்பதால் கார்பன் டை ஆக்ஸைடின் செறிவு அளவு அதிகரிக்கிறது. நில பயன்பாட்டில் மாற்றம் முக்கியமாக காட்டுகளை அழிப்பது) போன்றவற்றின் அடிப்படையில் கார்பன்டைஆக்ஸைட்டின் வெளியேற்றம் மூன்றாம் ஒரு பங்காகும்.

 

      புதை படிம எரிபொருள் எரிப்பு

காடுகளை அழித்தல்

  • கால்நடைகளின் நொதித்தல் மற்றம் உரங்களின் மேம்பாடு, நெல் பண்ணையம். நில பயன்பாடு மற்றும் நன்செய் நிலங்களில் மாற்றங்கள் மற்றம் விற்பனை செய்யப்படும் நிலங்களின் பயன்பாடு போன்றவற்றால் அதிகமாக மீத்தேன் வெளியேற்றப்படுகிறது. மேலும் பல்வேறு அழிவு முறைகளினால், இந்த இயக்க முறையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளிமண்டல மீத்தேனின் ஆதிக்கத்திற்கு காரணமாக அமைகிறது.
கால்நடைகளின் நொதிமுறை
நெல் நிலங்களில் மீத்தேனின் வெளிபாடு
  • குளிர் பதன பெட்டி முறையில் குளோரோஃபுளோரோ கார்பனின் பயன்படும், தீயணைப்பு முறைகள் மற்றும் உற்பத்தி முறைகள் போன்றவற்றில் குளோரோஃபுளோரோ கார்பன் மற்றும் ஹோலோன்களின் பயன்பாடு
  • வேளாண்மை செயற்பாடுகள், இதனுடன் உரங்களின் பயன்பாடு போன்றவை நைட்ரஸ் ஆக்ஸைடுகளின் அதிக பங்குகளுக்கு வழிவகுக்கிறது.

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015